பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா
( பதினோராமத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம் )

அத்த னருள்கீதை யான்றபதி னொன்றாமோத்
தொத்த வுலகனைத்து மோருடம்பா – மித்தகவு
பன்னவே தான்காட்டிப் பத்திப் பயன்வகையு
மன்னவே முற்றியதே வாய்ந்து.       11.56A

அத்தன் அருள் கீதை ஆன்ற பதினொன்றாம் ஓத்து

ஸ்வாமியான கண்ணனன் அருளிச்செய்த சிறப்புமிக்க பதினொன்றாமத்தியாயம்

ஒத்த உலகு அனைத்தும் ஓர் உடம்பாம் இத்தகவு பன்னவே தான் காட்டி

(ஸர்வேஶ்வரனுக்கு ப்ரகாரமாயிருக்கும் விஷயத்தில்) ஒத்திருக்கும் எல்லா உலகமும் எம்பெருமானுக்கு ஒரே உடம்பாயிருக்கும் இத்தன்மையை அர்ஜுனன் அனுஸந்திப்பதற்காகக் காட்டி

பத்தி பயன் வகையும் மன்னவே ஆய்ந்து

பக்தியின் பயன்களான ஜ்ஞானதாஶநப்ராப்திகளை நன்றாக ஆராய்ந்து

முற்றியதே

முடிவுற்றதே.

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினோராமத்தியாயம் முற்றிற்று

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top