பகவத் கீதை வெண்பா என்றிசைக்கப் பார்த்த னெழின்மாய னீதுரைத்தான் வென்றிவிசை யாவென்றன் மேனிகளை – யொன்றிய நீ பாரா யிரம்பலவாய்த் திவ்வியமாம் பல்வகையா வேரார் நிறத்துருவ மிங்கு. 11.6 என்று பார்த்தன் இசைக்க இவ்வண்ணமாக அரஜுனன் கூற, எழில் மாயன் அழகிய கண்ணன், ஈது உரைத்தான் பின் வருமாறு உரைக்கலுற்றான், வென்றி விசையா (போரில்) வெற்றியே காணும் அர்ஜுனா! ஒன்றிய நீ ஒருமனப்பட்டவனான நீ, என் தன் மேனிகளை எனது (எங்குமுள்ள) உருவங்களை, பார் காண்பாய். இங்கு இப்போர்க்களத்திலேயே, ஆயிரம் பலவாய் திவ்வியமாம் பலவகையா ஏரார் நிறத்துருவம் ஆயிரக்கணக்கானவையாய், ஆஶ்சர்யமானவையாய், பலவகைப்பட்டவையாய், பல நிறங்களையும், ஆகாரங்களையும் உடைய ஶரீரங்களையும் காண்பாய். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0