பகவத் கீதை வெண்பா

ஞான மனப்பயில்வி னன்றுமிக ஞானத்தி 
லான தியான மதிசயிதந – தியானத்திற்
கனமபயன விட்டியலவு கட்டழகு விட்டியல்விற்
றனனமருஞ் சாந்தி தலை.         12.12

மனப்பயில்வில் 

(அன்பில்லாத) குணாநுஸந்தானத்தைக் காட்டிலும்

ஞானம்

(அதற்கு உபாயமான) ஆத்மாவை நேரே காண்பதாகிற அறிவே

மிக நன்று

மிகச் சிறந்தது

ஞானத்தில்

(நிறைவடையாத) அந்த ஆத்மஸாக்ஷாத்காரத்தைக் காட்டிலும்

ஆன தியானம்

அதற்கு உபாயமான ஆத்மாவைத் தியானிப்பது

அதிசயிதம்

சிறப்புற்றது

தியானததில்

(நிறைவடையாத) அந்த ஆத்ம த்யானத்தைக் காட்டிலும்

கன்மபயம் விட்டு இயல்வு

(அதற்கு உபாயமான) பலத்யாகத்தோடு அனுஷ்டிக்கப்படும் கர்மமே

கட்டழகு

மிகச் சிறந்தது

விட்டு இயல்வில்

பலத்தில விருப்பத்தைவிட்டு அனுஷ்டிக்கப்படும் கர்மத்திலிருந்து

சாந்தி

மனச்சாந்தி

தலை தன் அமரும்

அடுத்தபடியாக ஏற்படும். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top