பகவத் கீதை வெண்பா வன்புலன்கள் செற்றெங்கும் வாய்ந்தசம புத்தியரா யின்புறுநன் கெப்பொருட்கு மேலுமவ – ரன்புடனே யென்னாமெ னின்னுயிரி னின்பமே யெய்துவர்கள் மனனாகே ளிங்கருமை மற்று. 12.4 வன்புலன்கள் செற்று கண் முதலான வலிமைமிக்க இந்திரியங்களைத் தம்தம் தொழில்களில் ஈடுபடாதபடி நன்கு அடக்கி எங்கும் வாய்ந்த சமபுத்தியராய் எலலாத் தேகங்களிலுமிருக்கும் ஆத்மாக்களிடமும (ஜ்ஞானத்தால்) ஒத்தவை என்னும நினைவுடையவர்களாய் இன்புறும் எப்பொருடகும் நன்கு ஏலுமவர் ஸப்தாதி விஷயங்களில் இன்பமடையும் எல்லா ஜீவராசிகளுக்கும நன்மையை விரும்புமவர்களாய் உள்ள கைவல்ய நிஷ்டர்கள் அன்புடனே என்னிடம் பக்திசெய்து என்னாம் என் இன்னுயிர் இன்பமே எய்துவர்கள் என்னையொத்த ஜ்ஞானஸவரூபத்தையுடையதாய் எனக்கு இனியதான ஜீவாத்மாவை அநுபவிக்கும் ஆனந்தத்தையே அடைவார்கள மன்னா! அரசனான அர்ஜுனா! மற்று மேலும் இங்கு இவ்வுலகில் அருமை கேள் சிரமத்தைக் கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0