பகவத் கீதை வெண்பா என்பத்தி யோகத் திணைந்தித் தொழில்செய்ய வுன்பக்கல் சத்தி யுளதன்றேல் – முன்புற்ற வெல்லாக கருமத தியல்பய னிஙகொழிந்து செல்லாய மனமடக்கித் தீர்ந்து. 12.11 என் பத்தியோகத்து இணைந்து என் விஷயமான பக்தியோகத்தைப் பற்றியவனாய் இத்தொழில் செய்ய உன் பக்கல் சத்தி உளதன்றேல் (பக்தியோகத்தின் தொடக்க நிலையான என் விஷயமான) இக்காமத்தையும் செய்ய உனக்கு இயலவில்லையானால் மனம் அடக்கி தீர்ந்து (காமயோகத்தாலே மனம் அடங்கப்பெற்றவனாய் முன்பு உற்ற முதல் ஷட்கத்தில் சொல்லப் பட்டபடி எல்லா கருமத்து இயலபயன இங்கு ஒழிந்து செல்லாய (பரபக்தியை உணடாக்குவதாய் ஆதமாவைச் சிந்திப்பதாகிற ஜ்ஞானயோகத்தைச் செய்பவனாய் அதற்குறுப்பாக) எல்லாக் கர்மங்களின் பலன்களையும் என்னிடம் ஸமர்ப்பிப்பாய். Previous Next