பகவத் கீதை வெண்பா

பெற்றதமைந் தென்றும் பிறங்குயிர்க்கண் யோகியா
யுற்றமன முள்ளொடுககி யோர்ந்துதெளிந் – தற்றமற
வெனனமர்ந்த நெஞ்சுதுணி வெயதியான்றா னெனபத்தன 
றன்னமர்ந்து நானுகப்பன் றான்.       12.14

மற்று ஓர் இடத்து மறம் அற்று

மற்ற எல்லா ஜீவராஸிகளையும் வெறுக்காதவனாய்

மித்திரனாய

அவர்களிடத்து நட்புக்கொண்டவனாய்

கருணை உற்றான்

(அவர்கள் துன்புறும்போது) கருணை காட்டுபவனாய்

உறு மமதை செற்றான்

மமகாரமற்றவனாய்

அகங்காரம் அற்றான்

அஹங்காரம் அற்றவனாய்

அமர் பொறையன்

பொறுமையுடையவனாய்

துக்கம் சுக்ம காணில் துணிந்து ஒப்பான்

இன்ப துன்பங்களை உறுதியாக ஒக்கநோக்குகின்றவனாய்

பெற்றது அமைந்து

கிடைத்ததுகொண்டு திருப்தி பெற்றவனாய்

என்றும் பிறங்கு உயிரக்கண் யோகியாய்

எப்போதும் ஜ்ஞானமயமான ஆத்மஸ்வரூபத்தை அநுஸந்திப்பவனாய்

உற்ற மனம் உள் ஒடுக்கி

மனத்தை வெளியில் திரியாமல் உள்ளே செலுத்தியவனாய்

அற்றம் அற ஓர்ந்து தெளிந்து

(ஸாஸத்ரங்களில் சொன்ன அாத்தங்களில் ஐயமற ஆராயந்து தெளிவு பெற்றவனாய்

என அமர்ந்த நெஞ்சு துணிவு எய்தியான் தான்

என்னிடத்தில் செலுத்தபபட்ட நெஞ்சையும் துணிந்த அறிவையும் உடையவனாயிருக்கும்

என் பத்தன் தன அமர்ந்து

(கர்மயோகத்தைச் செய்து) என்னிடம் அன்பு செலுத்துகிறவனிடம் ஈடுபட்டு

நான் உகப்பன் தான்

நான் உகந்திருப்பேன் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top