பகவத் கீதை வெண்பா

உகப்புவெறுப் பொன்றிலுமற் றுடசோக மற்று 
மிகப்பயிலு மாசை விடுத்துச்-சகத்தமரு (ம்)
நன்மையுடன் றீமை நசித்தியலும் பத்திமா
னென்மனத்தி லின்பத்தா னிங்கு .          12.17

ஒன்றிலும் உகப்பு வெறுப்பற்று

(இனியதான) எப்பொருளிலும் உகப்பற்று (இனியதலலாத) எப்பொருளிலும் வெறுப்பற்று

உள சோகமற்று

(இனியவற்றை இழந்தபோது ) மன வருத்தமில்லாமல்

மிகப் பயிலும் ஆசை விடுத்து

(இனியவற்றைப் புதிதாகப் பெற) மிகவும் உண்டாகும் விருப்பத்தை விட்டு

சகத்து அமரும் நன்மையுடன் தீமை நசித்து

இவ்வுலகில காணப்படும் புணணிய பாபச் செயல்களைக் கைவிட்டு

இயலும் பத்திமான்

கர்ம யோகத்தை அனுஷ்டிக்கும் அன்புடையவன்

இங்கு

இவ்வுலகத்தில

என் மனத்தில் இன்பத்தான்

என் மனத்துக்கு இனியவன். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top