பகவத் கீதை வெண்பா பகவத் கீதை வெண்பா(பன்னிரண்டாமத்தியாயததின் ஸாரததைக் கூறும் பாட்டு) வாய்ந்தவான கீதை வளர்பன்னிரண்டாமோத் தேய்ந்தநெறி பத்தி யியல்காட்டும் – வாய்ந்ததனிற் சக்தியில்லார் தாமுயலச் சாருநற் பத்திவருஞ் சித்த முயற்றியதுஞ் சேர்ந்து. 12.19A வாய்ந்த வான் கீதை பொருத்தமான சிறந்த கீதையில் வளர் பன்னிரண்டாமோத்து நிறைவடைந்த பன்னிரண்டாமத்தியாயம் ஏய்ந்த நெறி பொருந்திய உபாயமான பத்தி பக்தியின் இயல் தன்மையையும் அதனில் வாய்ந்து சக்தியில்லார்தாம் அந்த பக்தியோகத்தை அனுஷ்டிப்பதற்கு ஸக்தியில்லாதவர்கள் முயலச் சாரும் முயன்று அனுஷ்டி,ப்பதாய் நல் பத்தி வரும் நல்ல பக்தியை விளைப்பதான சித்த முயற்றி அதும் மனப்பழக்கங்களையும் சேர்ந்து காட்டும் ஒருங்காகக் காட்டும் வாதி கேஸரி அழகியமணவாள ஜீயரின் பகவத்கீதை வெண்பாவில் பன்னிரண்டாமத்தியாயம் முற்றிற்று. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0