பகவத் கீதை வெண்பா

அண்ண லுரைசெய்தா னவனுக்கென பானெஞ்சைத் 
திண்ணமிகச் சேர்த்துச் சிரத்தைமிகுத் – தெண்ணத்தா
லுறறென்று மென்னை யுபாசிப்பார் யோகியராய
மற்றெற கதிகரவர் வாய்ந்து.       12.2

அண்ணல் அவனுக்கு உரைசெய்தான் 

ஸ்வாமியான கண்ணன் அர்ஜுனனுக்குக் கூறினான்

என் பால் நெஞ்சை திண்ணம் மிகச் சேர்த்து

எனனிடம் நெஞ்சை உறுதியாக மிகவும் ஈடுபடுத்தி

சிரத்தை மிகுத்து

மிகுந்த ஸரத்தையுடையவர்களாய்

எண்ணததால்

அடையத்தக்கவன என்னும் நினைவால்

எனறும் என்னை உற்று

எப்போதும் என்னை அணுகி

உபாசிப்பார் அவர்

உபாஸிக்கின்றவர்கள்

மற்று வாய்ந்து

மிகப் பொருந்தி

எற்கு

எனக்கு

யோகியராய் அதிகர்

சிறந்த யோகிகள் ஆவர் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top