பகவத் கீதை வெண்பா

ஏவர் தொழிலனைத்து மென்னிடைவைத் தெற்பரராய்
மேவி யனன்னியமா மெய்யோகச – சேவையினா
லெனறுந் தியானித தியன்றோ ரெனைமருவி
நினறிங் குபாசிப்பார் நோந்து.      12.6

வென்றி அமர் பார்த்தனே

வெற்றியே பொருந்திய அர்ஜுனா!

ஏவர் தொழில் அனைத்தும் என்னிடை வைத்து

எவர்கள் (உண்ணல் யாகம் செய்தல் முதலான) எல்லாக் கர்மங்களையும் என்னிடத்தில் சமர்ப்பித்துள

எற்பரராய் மேவி

என்னையே பயனாகக் கொண்டவர்களாகப் பொருந்தி

அனன்னியமாம மெய்யோகச் சேவையினால்

வேறு பயன்கருதாத உண்மையான யோகத்தை அநுஷ்டித்து,

இங்கு என்றும் தியானித்து எனைமருவி நின்று இயன்றோர் நோந்து உபாசிப்பார் ­

இவ்வுலகில் என்னைக் குறித்து தியானம் அர்ச்சன்ம முதலானவற்றை என்னோடு கூடிநின்று செய்பவர்களாய் பொருந்தி உபாசிக்கிறார்களோ

அன்புடன் என்பாலே அமர்ந்த மனத்தார் அவரை

என்னிடம் அன்போடு செலுத்தப்பட்ட நெஞ்சையுடைய அவர்களை

துன்புயரும் இப்பவமாம் சூழ்கடல் நின்று

துன்பம் மிகுந்த இந்த ஸ்மஸாரமாகிற கடலிலிருந்து

தாழாது

விரைவிலேயே

நன்று இயன்று

நன்கு செயல்பட்டு

நான்

நான்

இன்புடனே மேலா எடுப்பன் காண்

ஆனந்தத்தோடு கைதூக்கி விடுவேன். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top