பகவத் கீதை வெண்பா வாய்ந்த பிரகிருதி நின்ற புருடனதி லேய்ந்த குணத்தி னியல்பெய்துந் – தோய்ந்தகுண சங்கமடி யான சதசத்தாம் யோனிகளிற் றங்க வவப்பிறப்பிற் சார்ந்து. 13.21 வாய்ந்த பிரகிருதி நின்ற புருடன் (பொருந்தியிருக்கும்) ப்ரக்ருதிகார்யமான சரீரத்தில் இருக்கும் ஜீவன் அதில் ஏய்ந்த குணத்தின் இயல்பு அந்த ப்ரக்ருதியின் குணங்களால் உண்டாகும் இன்பதுன்பங்களை தோய்ந்த குணசங்கம் அடியான அந்த இன்பதுன்பங்களைக் காரணமாகக் கொண்ட சதசத்தாம் யோனிகளில் தங்கு அவ் அவ் அப்பிறப்பில் சார்ந்து (தேவர் முதலான) நல்ல யோனிகளிலும் (திர்யக் முதலான ) தாழ்ந்தயோனிகளிலும் தங்கியிருக்கும் அந்தந்த தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவரப் பிறப்புகளை அடைந்து எய்தும் அநுபவிப்பான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0