பகவத் கீதை வெண்பா மிக்கார் சிலர்நெஞ்சால் மெய்ப்பரதி யானத்தாற்றக்கா ருயிர்காண்பர் தாஞ்சிலர்கள் – எக்காலசாங்கியயோ கந்தன்னாற் றங்கரும யோகத்தாலாங்கறிவர் வேறுசில ராய்ந்து 13.24 மிக்கார் சிலர் யோகம் கைவந்த சிலர் மெய் ஸரீரத்தில் (இருக்கும்) ஆருயிர் தமது ஆத்மாவை நெஞ்சால் மனத்தாலே தக்கபரதியானத்தால் தகுதியும் சிறப்புமுடைய யோகத்தின் மூலம் தாம் காண்பர் தாமே காண்கிறார்கள் சிலர்கள் (யோகம் கைவரப்பெறாத) சிலர் எக்கால சாங்கிய யோகந்தன்னால் எக்காலத்திலும் அநுஷ்டிக்கப்படும் ஜ்ஞாநயோகத்தாலும் வேறு சிலர் மற் றும் சிலர் தம் கருமயோகத்தால் தாம் அநுஷ்டிக்கும் (ஜ்ஞாநத்தோடு கூடிய) கர்மயோகத்தாலும் (மனத்தை யோகத்துக்குத் தகுதியுடையதாக்கி) ஆங்கு ஆய்ந்து அறிவர் முற்கூறியபடி ஆத்மாவை நன்கு காண்பர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0