பகவத் கீதை வெண்பா மற்றிங்கவ் வாறறியார் மன்னறிவார் பாற்கேள்வியுற்றன் புடனே யுபாசிப்ப – ரற்றமாவந்த வவரு மரும்பவத்தைத் தாங்கடப்பர்இந்த மிகக்கேள்வி யேய்ந்து 13.25 மற்று இங்கு அவ்வாறு அறியார் முற்கூறிய ஆத்ம தர்ஸந ஸாதநங்களை அறியாத மற்றும் சிலர் மனனறி வார்பால் நிலைநின்ற அறிவுடையவர்களிடம் கேள்வி யுற்று (கர்மயோகம முதலானவற்றை) உபதேஸமூலமாகப் பெற்று அன்புடனே உபாசிப்பர் (அவற்றைக் கொண்டு ஆத்மாவை) அன்புடன் உபாஸிக்கிறார்கள் அந்த அவரும் அத்தகைய அவர்களும் இந்த கேள்வி மிக ஏய்ந்து இந்த உபதேஸத்தை மிகுதியாகப்பெற்று அரும் பவத்தை கடக்க அரிதான ஸம்ஸாரத்தை அற்ற மா உறுதியாக தாம் கடப்பர் தாமே தாண்டுவர் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0