பகவத் கீதை வெண்பா

ஒத்துப் பொருளனைத்தி லுள்ளே யமரவிருந்
தத்துப் பரமேச னாகியே – தத்துவங்கள்
மாயு மளவதிலு மாயா தவனைக்கண்
டாயுமவன் கண்டா னமைந்து   13.27

பொருள் அனைத்தில்

(தேவர் முதலான) எல்லா ஜீவராசியிலும்

ஒத்து

ஒருபடிப்பட்டவனும்

உள்ளே அமர இருந்து

( அந்த சரீரங்களின்) உள்ளே (அவற்றிலும்) வேறாக இருப்பவனும்

அத்து பரமேசன் ஆகியே

அந்தந்த தேஹக் இந்திரியங்கள் மனம் முதலானவற்றைக் குறித்து மேலான ஈஸ்வரனாயிருப்பவனும்

தத்துவங்கள் மாயும் அளவதிலும்

ஆந்த தேஹம் முதலானவை அழியும்போதும்

மாயாதவனை

தான் அழியாமலிருப்பவனுமான ஆத்மாவை

கண்டு

கண்டு

ஆயுமவன்

(தேஹத்தையும் ஆத்மாவையும்) பிரித்து அறிபவனே

அமைந்து கண்டான்

உள்ளபடி ஆத்மாவைக் கண்டவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top