பகவத் கீதை வெண்பா எவ்விடத்துந் தானிறையா யேய்ந்திருக்கு மிவ்வுயிர்தானவ்விடததி லொததியல்வ தாவறிவா – னிவ்விடத்திற்றன்னைத்தன் னெஞ்சதனாற் றானலியான் றானடையும்பின்னைப் பரகதியாம் பேறு 13.28 எவ்விடத்தும் (தேவர் முதலான) எல்லா ஸரீரங்களிலும் தான் இறையாய் ஏய்ந்திருக்கும் இவ்வுயிர்தான் (அந்தந்த தேஹங்களுக்கு) ஸ்வாமியாகவும் ஆதாரமாகவும் நியமிப்பவனாகவும் பொருந்தியிருக்கும் இந்த ஆத்மா அவ்விடத்தில் ஒத்து இயல்வதா அறிவான் (முற்கூறியபடி எல்லா ஸரீரங்களிலும் ஒருபடிப்பட்டதாயுள்ளதாக அறிபவன் இவ்விடத்தில் இவ்வுலகில் தன்னை தன் ஆத்மாவை தன் நெஞ்சதனால் தன்னுடைய நெஞ்சாலே தான் நலியான் அழிக்காமல் ரக்ஷிக்கிறானன்றோ பின்னை அப்படி ஒருபடிப்பட்டவனாகக் கண்டபின்பு பரகதியாம் பேறு மேலான ப்ராப்யமான தன் ஆத்மாவை அடைவதாகிறபயனை தான் அடையும் தானே அடைகிறானன்றோ Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0