பகவத் கீதை வெண்பா பதிமூன்றாம் அத்யாயம் - க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ஞ விபாகயோகம் மூன்று ஷட்கங்களின் ஸாரப்பொருள் கன்ற முயிருணர்வாற் கட்டவரு முன்னாறுநன்மையிறை பத்தி நடுவாறு- தன்மையுடன்காயமுயி ரீசன் கருமமறி வன்புவகையேயவமைந் தேலுமீ றாறு. 13.0A முன் ஆறு முதல் ஆறுஅத்தியாயங்கள் கட்டவரும் முயற்சி செய்ய உண்டாகும் கன்மம் உயிருணர்வால் கர்ம ஜ்ஞான யோகங்களால் ஏய அமைந்து ஏலும் பொருந்தி விளங்கி நிற்கும் நடு ஆறு நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்கள் நன்மை இறை பத்தி சிறப்புமிக்க பரமாத்ம பக்தியோகத்தால் ஏய அமைந்து ஏலும் பொருந்தி விளங்கி நிற்கும் ஈறு ஆறு கடைசியிலுள்ள ஆறு அத்தியாயங்கள் காயம் உயிர் ஈசன் கருமம் அறிவு அன்பு வகை உடல் உயிர் ஈச்வரன் கர்ம ஜ்ஞான பக்தியோகங்கள் தன்மையுடன் இவற்றின் தன்மைகளோடு ஏய அமைந்து ஏலும் பொருந்தி விளங்கி நிற்கும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0