பகவத் கீதை வெண்பா

இப்படியாற் கேத்திரமு ஞானத் தியல்வகையு
மெய்ப்படியா ஞேய வியப்பதுவுந் – தப்பறவே
யான்றிரளச் சொன்னேனென் பத்தனா யீதறிந்து
தான்றிகழ்ந் தென்மயனாஞ் சார்ந்து.      13.18

இப்படியால்

இவ்வண்ணமாக

கேத்திரமும்

க்ஷேத் ரம் எனப்படும் ஸரீரமும்

ஞானத்து இயல் வகையும்

ஆத்ம ஜ்ஞாந ஸாதனங்களும்

மெய்ப்படியாம் ஞேய வியப்பதுவும்

அறியத்தக்க ஆத்மஸ்வரூபத்தின் உண்மையான தன்மையும்

தப்பு அறவே

தவறில்லாமல்

யான்

நான்

திரளச் சொன்னேன்

சுருக்கமாகச் சொன்னேன்

என் பத்தனாய்

எனக்கு பக்தனாயிருப்பவன்

ஈது அறிந்து

இம் மூன்றின் உண்மையையுமறிந்து

தான் சார்ந்து திகழ்ந்து என்மயனாம்

என்னைப்போல் தானும் ஸம்ஸாரத்தோடு தொடர்பற்றவனாவதற்குத் தகுதி பெறுகிறான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top