பகவத் கீதை வெண்பா

கேத்திரங்க னெங்குமமர் கேத்ரஞ்ஞ நானாகப்
பார்த்தறிவு மேவுநீ பார்த்தனே-சீர்த்த
விவையிரண்டு மற்றறியு மிந்தவறி விங்கு
நவையிலறி வென்றறிவ னான் .     13.2

பார்த்தனே

அர்ஜுனா!

கேத்திரங்கள் எங்கும்

(தேவர் மனிதர் முதலான) எல்லா சரீரங்களிலும்

அமர்

வாழும்

நான் ஆகப் பார்த்து

என்னை ஆத்மாவாகக் கொண்டவனாகக் கண்டு

நீ அறிவு மேவு

நீ அறிவாளியாவாய்

சீர்த்த இவை இரண்டும்

முற்கூறிய சிறப்புக்களைப் பெற்ற சரீரமும் ஜீவாத்மவுமாகிற இந்த இரண்டையும்

மற்று அறியும் இந்த அறிவு

வெவ்வேறாகப் பிரித்து அறிவதோடு அவையிரண்டும் எனக்கு சரீரமாயிருப்பவை என்று அறியும் இந்த அறிவானது

இங்கு

இவ்வுலகில்

நவை இல் அறிவு என்று

குற்றமற்ற அறிவு என்று

நான் அறிவன்

நான் முடிவுகட்டியிருப்பேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top