பகவத் கீதை வெண்பா

காரிய காரணங்கள் கர்த்தா வியற்றுமிடத்
தேய பிரகிருதி யேதுவா – மேயசுகந்
துக்கம் புசிக்குந் தொடர்பதனி லேதுவா
யொக்க வரும்புருட னுற்று .      13.20

காரியகாரணங்கள்

ஸரீரமும் பதினொரு இந்த்ரியங்களும்

கர்த்தா இயற்றுமிடத்து

ஒரு செயலைச் செய்பவையாகச் செயல் புரியும்போது

ஏய பிரகிருதி

ஜீவனோடு ) சேர்ந்திருக்கும் பிரகிருதி

ஏதுவாம்

காரணமாகச் சொல்லப்படுகிறது

மேய சுகம் துக்கம் புசிக்கும் தொடர்பதனில்

தன்னிடத்திலிருக்கும் இன்பதுன்பங்களை அனுபவிக்கும் விஷயத்தில்

புருடன்

ஜீவன்

உற்று

(அந்தப் பிரகிருதியோடு) தொடர்புகொண்டு

ஏதுவாய் ஒக்கவரும்

எப்போதும் காரணமாயிருப்பான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top