பகவத் கீதை வெண்பா

எப்போது பூதத் தியல்வேறு பாட்டினையு
மொப்பொருவா வொன்றி லுருவகையுந் – துப்போடார்
பந்தப் பரப்புமுணர் பாங்கனப் போதுயிரா
மந்தப் பிரமமடைந் தாம்.      13.30

பூதத்து இயல் வேறுபாட்டினையும்

ப்ரக்ருதி புருஷர்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் தேவர் முதலான ஜீவர்களில் (தேவத்தன்மை மநுஷ்யத்தன்மை குட்டையாயிருக்கை நெட்டையாயிருக்கை முதலான) வேறுபாடுகளை

ஒப்பு ஒருவா ஒன்றில் உறுவகையும்

தனக்கு ஒப்பில்லாத (ப்ரக்ருதியாகிற) ஒரே தத்துவத்தில் இருக்கும் வகையையும்

துப்போடு ஆர்பந்தப் பரப்பும்

வலிமைமிக்கு விளங்கும் பிள்ளை பேரன் முதலான) ப்ரக்ருதி பந்தங்களின் விரிவையும்

எப்போது உணர்பாங்கன்

எப்போது உணரும் பக்குவத்தை அடைகிறானோ

அப்போது

அந்தக்காலததில்

உயிராம் அந்த பிரமம்

பெரிதாகையாலே பிரம்மம் எனப்படும் அத்தகைய தன் உயிரை

அடைந்து ஆம்

அடைந்தவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top