


ஓங்குவிசும் பெங்கு முளதாயு நுட்பத்தா
லாங்கதனிற் றோயா ததுபோலத் – தாங்குடல
மேதிலுநின் றாலு மிலகுமுயி ரவ்வண்ண
மாதியல்வாற் றோயான மங்கு. 13.32
ஓங்குவிசும் பெங்கு முளதாயு நுட்பத்தா
லாங்கதனிற் றோயா ததுபோலத் – தாங்குடல
மேதிலுநின் றாலு மிலகுமுயி ரவ்வண்ண
மாதியல்வாற் றோயான மங்கு
ஓங்கு விசும்பு -சிறப்புள்ள ஆகாயம்
எங்கும் உள தாயும்-எல்லாப்பொருள்களோடும் சேர்ந்திருந்தபோதிலும்
நுட்பத்தால் – நுண்ணியதாயிருக்கையால்
ஆங்கு அதனில் தோயாதது போல – அந்த எல்லாப்பொருள்களின் தன்மைகளோடு
ஒட்டாமலிருப்பதுபோல
இலகும் உயிர்- (மிக நுண்ணியதாய்) விளங்கும் ஜீவாத்மாவும்
தாங்கு உட லம் ஏதிலும் நின்றாலும்-தான் தாங்கி நிற்கும் தேவர் மனிதர் முதலான
எந்த உடலில் இருந்தபோதிலும்
அங்கு ஆதி யல்வால் – அந்தந்த தேஹத்தில் அதின் தன்மைகளோடு
அவ்வண்ணம் தோயானாம் – ஆகாயத்தைப் போலவே ஒட்டாமலிருக்கிறான் 13.32