பகவத் கீதை வெண்பா

பகவத் கீதை வெண்பா

(பதின்மூன்றாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

இத்தன்மை யாலுடலு மிவ்வுயிருஞ் சேர்ந்தியலு
மத்தன்மை யாமாப் பவிழ்விரகு – மெய்ததன்மை
யோர்ந்த பதின்மூன்றா மோத்திங் குரைத்து முடித்
தாய்ந்தபொரு ளாய்ந்தோ மறிந்து .     13.34A

இத்தன்மையால்

இவ்வண்ணமாக

உடலும் இவ்வுயிரும் சேர்ந்து இயலும் அத்தன்மையாம்

இந்த உடலும் ஜீவாத்மாவும் ஒன்றோடொன்று (கர்மத்தால்) சேர்ந்து செயல் புரியும் அந்நிலையாகிற

ஆப்பு

ஸம்ஸாரபந்தம்

அவிழ் விரகு

போவதற்கு உபாயமான

மெய்த்தன்மை

மெய்யான ஜீவஸ்வரூப ஜ்ஞானத்தையும் அமாநித்வாதி குணங்களையும்

ஓர்ந்த

ஆராய்ந்த

பதின்மூன்றாம் ஓத்து

பதின்மூன்றாம் அத்தியாயம்

இங்கு உரைத்து முடித்து ஆய்ந்த பொருள்

இங்கு சொல்லிமுடித்து விசாரித்த அர்ததங்களை

அறிந்து ஆய்ந்தோம்

ஆராய்ந்து அறிந்தோம்

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதின்மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top