பகவத் கீதை வெண்பா

இந்தியங்கள் சார்பொருளி லென்றுந் துறந்திருத்தல்
வந்தியலு மாங்கார மற்றொழிதல் – புந்தியினாற்
சென்ம மரணஞ் செரைநோய்சேர் துக்கமாம்
புன்மை யுணரும் புணர்ப்பு .     13.8

இந்தியங்கள் சார்பொருளில் என்றும் துறந்திருத்தல்

இந்த்ரியங்களால் அறியப்படும் ஸப்தாதி விஷயங்களில் எப்போதும் பற்றற்றிருக்கை

வந்து இயலும் ஆங்காரம் அற்று ஒழிதல்

இயல்வாக உண்டாகும் தேஹாத்மாபிமானத்தை அடியோடுவிடுதல்

புந்தியினால்

அறிவினாலே

சென்மம் மரணம் செரை நோய் சேர் துக்கமாம் புன்மை உணரும் புணர்ப்பு

பிறப்பு இறப்பு கிழத்தனம் நோய் இவற்றால் வரும் துன்பம் ஆகிய தோஷங்களை அனுஸந்திப்பது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top