பகவத் கீதை வெண்பா பதினான்காம் அத்தியாயம் - குணத்ரய விபாக யோகம் குணத்ரய விபாக யோகம் அத்தியாயப்பொருளின் சுருக்கம் முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பதுவுமக்குணங்க ணீங்குவிக்கு மவ்விரகு – மிக்குயர்ந்தகீதை பதினாலா மோத்துக் கிளர்ந்துரைக்கும்போதத் தியல்பாற் புரிந்து. 14.0 மிக்கு உயர்ந்த கீதை பதினாலாம் ஒத்து மிகச்சிறந்த கீதையின் பதினாலாம் அத்தியாயம் முக்குணங்கள் பந்தத்து மூட்டுகின்ற நேர்பு அதுவும் (ஸத்வம் முதலிய) மூன்று குணங்கள் ஸம்ஸார பந்தத்தில் (தாமே செயலுக்குக் காரணமாயிருந்து) நன்றாகக் கட்டிவிடுகின்றமுறையையும் அக்குணங்கள் நீங்குவிக்கும் அவ்விரகும் அந்தக் குணங்களை நீங்கச்செய்யும் முறையையும் போதத்து இயல்பால் அறிவிக்கவேண்டிய முறையில் புரிந்து விருப்பத்தோடு கிளர்ந்து உரைக்கும் உறுதியாகக்கூறும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0