பகவத் கீதை வெண்பா தன்னமரு மானமவ மானஞ்சா ரானண்ப ரொன்னலர்தம் பக்கத்து மொத்தியல்வான் – மன்னவருஞ் செய்ம்முயற்றி யெல்லாஞ் செய்யா னவன்குணங்கண் மெய்ம்முயற்றி யாற்கடந்தான் மிக்கு . 14 . 25 தன்சுகத்தும் துக்கத்தும் தான் சமனாய் தனக்கு வரும் இன்பதுன்பங்களை ஒக்க நினைப்பவனாய், தன் அமர்ந்து தன் ஆத்மாவிலேயே ஈடுபட்டிருப்பவனாய், பொன் கல் உடன் ஓடு இதனில் புந்தி ஒத்தோன் பொன்னையும், கல்லையும், ஓட்டாஞ்சில்லையும் ஒன்றாக நினைப்பவனாய், அன்பர் வெறுப்பர் இடை ஒப்போன் அன்புடையவர்களிடத்தும் வெறுப்புடையவரிடத்தும் ஒருபடிப்பட்டவனாய், மிகு பழி நன்கீர்த்தி நிறுத்த சமன் தன்னைப்பற்றிய மிகுந்த பழிச் சொல்லையும் நல்ல துதிச்சொல்லையும் ஒன்றாக எண்ணுகிறவனாய், நிகழ்ந்து நிற்கும் (தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்டவனாகத்) தன்னையறிந்து வாழ்பவனாய், தன் அமரும் மானம் அவமானம் சாரான் பிறர் தன்னை மதிப்பதையும் அவமதிப்பதையும் பொருட் படுத்தாதவனாய், நண்பர் ஒன்னலர் தம் பக்கத்தும் ஒத்து இயல்வான் நண்பர்கள் எதிரிகள் ஆகிய இருதரப்பையும் ஒன்றாக நினைப்பவனாய், மன்னவரும் செய் முயற்றி எல்லாம் செய்யான் தேஹத்தொடர்பை ஒட்டிவரும் எல்லா முயற்சிகளையும் கைவிட்டிருப்பவனாய், அவன் உள்ளவன், குணங்கள் மெய் முயற்றியால் மிக்கு கடந்தான் முக்குணங்களையும் தனது உண்மையான முயற்சியாலே மிகவும் கடந்தவனாவான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0