பகவத் கீதை வெண்பா

(பதினாலாமத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

கட்டுதலுங் கர்த்தாவாந் தன்மையுமக் கட்ட விழ்ப்பும்
விட்டுத் திகழமுதின் மேவுதலுந் – தொட்டுவரு
முக்குணத்தின் சார்வா முயன்றுபதி னாலாமோத்
துக்குமுரை யோரு முணர்ந்து.          14.27A

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத் கீதை வெண்பாவின் பதினாலாமத்தியாயம் முற்றிற்று.

தொட்டு வரும் முக்குணத்தின் சார்வா

(அனாதிகாலமாக உம்மோடு) தொடர்பு கொண்டிருக்கும் முக்குணங்களைப் பற்றிய,

கட்டுதலும்

(அவை ஜீவனைக்) கட்டும் முறையும்,

கர்த்தாவாம் தன்மையும்

(அவற்றுக்குள்ள) செயல் புரியும் தன்மையும்,

அக்கட்டவிழ்ப்பும்

அந்தக் கட்டு நீங்கும் முறையும்,

விட்டு திகழ் அமுதின் மேவுதலும்

அக்கட்டு விட்டவுடன் ஒளிவிடும் மரணமற்ற ஆத்மாவை அடைதலும்,

முயன்று உரை

நன்கு விளக்கப்படும்,

பதினாலாமோத்துக்கும்

பதினாலாமத்தியாயத்துக்குப் பொருளை,

உணர்ந்து ஒரும்

ஆராய்ந்து அறிவீர்களாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top