பகவத் கீதை வெண்பா

சத்துவமிக் கோக்கந் தரும்பொழுதிற் றான்மரணத்
தொத்துடம்பு விட்ட வுயிருடையோன்-றத்துவத்தின்
மேலறிவு சேர்ந்தார் மிகவமல மாங்குலத்துச் சாலவவன்
றான்பிறக்குஞ் சார்ந்து.       14 . 14

சத்துவம் மிக்கு ஓக்கம் தரும் பொழுதில் தான்

ஸத்வ குணம் மேலோங்கியிருக்கும் ஸமயத்தில்,

மரணத்து ஒத்து உடம்பு விட்ட உயிருடையோன் அவன்தான்

மரணத்தை அடைந்து உடம்பை விட்ட ஜீவனானவன்,

தத்துவத்தின் மேல் அறிவு சேர்ந்தார்

ஆத்ம தத்துவத்தைப் பற்றிய உண்மையறிவாகிற மேலான அறிவைப் பெற்றவர்களுடைய,

மிக அமலமாம் குலத்து சார்ந்து

அறிவின்மையாகிற குற்றம் சிறிதும் அற்ற குலங்களை அடைந்து,

சால பிறக்கும்

நல்ல பிறவியை அடைவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top