பகவத் கீதை வெண்பா

இந்த வறிவை யினிதார்ந்திங் கென்னொப்பா
மந்த வுயர்வை யடைந்தவர்கள் – பந்தமுடன்
சற்கத்தி லும்பிறவார் தாந்துயரஞ் சாரார்க
ளொற்கப் பிரளயத்தி னுள்.           14 . 2

இந்த அறிவை

(சொல்லப்போகும்) இந்த ஞானத்தை

இனிது ஆர்ந்து

இனிதாகப்பெற்று

இங்கு என் ஒப்பாம் அந்த உயர்வை அடைந்தவர்கள்

இத்தேரில் வீற்றிருக்கும் என்னோடு ஒத்திருக்கும் அத்தகைய பெருமையைப் பெற்றவர்களாய்

சற்கத்திலும் பந்தமுடன் பிறவார்

(அவர்கள்) ஸம்ஸாரத்தில் கட்டுப்பட்டுப் பிறப்பை அடைவதில்லை;

ஒற்கப்பிரளயத்தினுள் தாம் துயரம் சாரார்கள்

மரணமாகிற துன்பத்தையும் அடைவதில்லை.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top