பகவத் கீதை வெண்பா முன்னுக் குதாசீனன் போலிருக்கு முக்குணங்க டன்னுற் றலைத்திடினுந் தான்சலியான் – மன்னுகுணச் செய்தியிது வென்றிருக்குஞ் செய்தொழிலிற் சேட்டியான் மெய்திருந்து நெஞ்சுடையான் மேல். 14 . 23 மேல் மெய்திருந்து நெஞ்சுடையான் (குணங்களைக் காட்டிலும்) மேற்பட்ட ஆத்மாவில் உண்மையாகவே ஈடுபட்ட மனமுடையவனான குணங்கடந்தவன், முன்னுக்கு உதாசீனன் போலிருக்கும் முன்னே தோற்றும் ப்ராக்ருத விஷயங்களில் (முற்கூறிய விருப்பு வெறுப்புகள் விளையாதபடி அவற்றைப்) பொருட்படுத்தாமலிருப்பான்; முக்குணங்கள் தன் உற்று அலைத்திடினும் ஸத்வம் முதலான மூன்று குணங்களும் தம் வசமாம்படி இழுத்தாலும், தான் சலியான் (விருப்பு வெறுப்புகள் உண்டாகி) தான் விகாரமடையமாட்டான்; மன்னுகுணச்செய்தி இது என்று இருக்கும் தேஹத்தோடு என்றுமிருக்கும் குணங்கள் அவற்றின் கார்யங்களான ப்ரகாஶம் முதலானவற்றை விளைப்பதே இது என்று அனுஸந்தித்து மௌனமாயிருப்பான். செய்தொழிலில் சேட்டியான் (குணங்களின்) செயல்களுக்கு அனுகுணமாகச் செயல்புரிவதில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0