பகவத் கீதை வெண்பா

சத்துவ ரசோதமமாய்ச் சாருங் குணமூன்று
மொய்த்த பிரகிருதி யுள்ளவையா – மித்தகைய
வாருயிரைத் தேகத் தமரப் பிணிக்குமே
சீருயருந் தோளாய் செறுத்து.            14 . 5

சீர் உயரும் தோளாய்!

சிறப்புகள் மிக்க தோள்களையுடைய அர்ஜுனா!

மொய்த்த பிரகிருதி உள்ளவையாம்

சரீரத்திற்குக் காரணமாயிருக்கும் மூலப்ரக்ருதியில் இயல்வாகச் சேர்ந்திருக்கும்

சத்துவரசோதமமாய் சாரும் குணம் மூன்றும்

ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் ஒன்றோடொன்று சேர்ந்த மூன்று குணங்களும்

இத்தகைய ஆருயிரை

இயல்வாக அந்த குணங்களோடு தொடர்பற்றவனாய் தேஹத்தில் இருக்கும் ஜீவனை

செறுத்து

அவனது இயல்வான பெருமையை அடக்கி

தேஹத்து அமர பிணிக்குமே

தேஹத்தோடு பொருந்தி இருக்குப்படி கட்டி வைக்கின்றன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top