பகவத் கீதை வெண்பா

ராகமதின் தன்மை ராசதமாங் கௌந்தேயா
தாகமுடன் சங்கந் தனை விளைக்கு – மாகநினை
மற்றதுதான் கன்மத்தில் வன்னசையாற் றேகிதனை
யுற்றமரக் கட்டு முறைத்து.            14 . 7

கௌந்தேயா

குந்தீபுத்திரனே!

ராகமதின் தன்மை ராசதமாம்

ரஜோகுணம் (ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான) ஆசையை விளைப்பது என்றும்

தாகமுடன்

ஶப்தம் முதலான விஷயங்களில் ஆசையோடு,

சங்கம் தனை விளைக்கும் ஆகநினை

புத்திரன் மித்திரன் முதலானாரிடத்தில் பாசத்தையும் உண்டாக்குமென்றும் அறிவாய்.

மற்று அதுதான்

மேலும் அந்த ரஜோகுணம்

தேகிதனை

தேஹத்திலிருக்கும் ஜீவனை

கன்மத்தில் வன்னசையால்

செயல்களில் வலிய ஆசையை உண்டாக்கி

உரைத்து உற்று அமரக்கட்டும்

உறைப்புடன் தேஹத்திலேயே பொருந்தியிருக்கும்படி கட்டிவிடும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top