பகவத் கீதை வெண்பா

சத்துவ ம தின்பந் தனிற்றுவக்குந் தானிரசத்
தொத்தியலுங் கன்மந் துவக்குவிக்கு – மைத்தும்
மன்னறிவு தன்னை மறைத்திட்டோர்ப் பின்மையினிற்
றுன்னமிகத் தான்றுவக்குஞ் சூழ்ந்து.          14 . 9

சத்துவமது

(முற்கூறிய மூன்றுகுணங்களில்) அந்த ஸத்வகுணமானது

இன்பம் தனில் துவக்கும்

சுகத்தில் (முக்கியமாகப்) பற்றைவிளைக்கிறது;

தொத்து இயலும்

முயற்சியை விளைக்கும்

இரசம் தான்

ரஜோகுணமானது

கன்மம் துவக்கு விக்கும்

கர்மத்தில் (முக்கியமாகப்) பற்றைவிளைக்கிறது;

மைத்தும் தான்

(உள்ளிருளை விளைக்கும்) தமோகுணமானது

மன் அறிவுதன்னை மறைத்திட்டு

பொருள்களை உள்ளபடி அறியும் அறிவை மறைத்து

சூழ்ந்து

(ஜீவனைச் சூழ்ந்து நின்று)

துன்னம் மிக ஓர்ப்பின்மையினில்

மிகுதியான கவனமின்மையில்

துவக்கும்

(முக்கியமாகப்) பற்றை விளைக்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top