பகவத் கீதை வெண்பா

ஆதித்தன் பானின் றனைத்துலகுந் தான்விளக்குஞ்
சோதிச் சுடர்சோமன் சூழங்கி- மீதிலகி
மன்னுமொழி தன்னின் வனப்பதுவு மன்னனே
யென்னதென வுற்றறிநீ யேய்ந்து.       15.12

மன்னனே

அரசனான அர்ஜுனா!

ஆதித்தன் பால் நின்று

ஸூர்யனிடமிருந்துகொண்டு

அனைத்துலகும் தான்

எல்லா உலகையும்

விளக்கும் சோதி

ஒளிவிடச்செய்யும் ஒளியும்

சுடர் சோமன்

பிரகாஸிக்கும் சந்திரன்

சூழ் அங்கி

சூழ்ந்து எரிக்கும் அக்னி

மீது இலகி

இவற்றில் இருந்து கொண்டு (உலகனைத்தையும் ஒளிவிடச்செய்யும் ஒளியும்)

என்னது

என்னுடையது

அதுவும்

அந்த ஒளி

மன்னும் மொழி தன்னின் வனப்பு

(அந்த ஸூர்யன் முதலான தேவர்கள் என்னைக் குறித்துச் செய்த) நிலையான துதிகளாலுண்டான சிறப்பு

என

என்று

நீ ஏய்ந்து உற்று அறி

நீ பொருந்தி நன்கு அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top