பகவத் கீதை வெண்பா

பூதலத்தின் மேவியே பூதங்க ணான்றரிப்பன்
மீதடர்த்து நின்ற மிகுமிடுக்காற் – சீதளஞ்சேர்
சோமனென நின்றமுதஞ் சோர்ந்தே பயிரெல்லாஞ்
சேம முறநிறைப்பன் சேர்ந்து.        15.13

நாள்

நான் பூதலத்தில்

மேவியே

பூமியில் நுழைந்து

மீது அடர்த்து நின்ற மிகு மிடுக்கால்

அனைத்தையும் வெற்றி கொண்டு விளங்கும் என் பெரிய திறமையாலே

பூதஙகள் தரிப்பன்

எலலாப் பொருள்களையும் தாங்குவேன்

சீதளம் சேர் சோமன் என நின்று

குளிர்ந்த அம்ருதரஸத்தோடு கூடிய சந்திரனாக நின்று

பயிர் எல்லாம் சேர்ந்து

எல்லாப் பயிர்களையும் (கிரணங்களாலே அடைந்து

அமுதம் சோர்ந்தே

அம்ருதத்தைப் பெய்து

சேமம் உற நிறைப்பன்

(அவை) வளரும்படி நிறைவு செய்வேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top