பகவத் கீதை வெண்பா இத்தி னுருவு மிதின்முடிவு மாதியுமற்றத்தி னிருப்பு மறிவரிதாம்- மொய்த்தமர்ந்த மூலவர சாமிதனை முற்று மறுத்தறவாங் கோலவலிச் சத்திரந்தான் கொண்டு. 15.3 இத்தின் உருவும் இந்த அரசமரத்துக்கு (முன் கூறப்பட்ட) உருவமும் இதின் முடிவும் இந்த மரத்தின் அழிவும் (இதின்) ஆதியும் (இந்தமரத்தின்) காரணமும் மற்று அத்தின் இருப்பும் அம்மரம் நிலைநிற்கும் ஆதாரமும் அறிவு அரிதாம் (முன் கூறப்பட்டபடி ஸம்ஸாரிகளால்) அறியப்படுவதில்லை மொய்த்து அமர்ந்த மூல அரசாம் இதனை முன் கூறப்பட்டதாய் நன்கு பலவிதமாக ஊன்றி நிற்கும் வேரையுடையதான (ஸம்ஸாரமாகிற) இந்த அரசமரத்தை அறவாம் கோலவலி சத்திரம் தான் கொண்டு பற்றின்மையாகிற மிகஉறுதியான ஆயுதத்தைக் கொண்டு முற்றும் அறுத்து அடியோடு வெட்டி Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0