பகவத் கீதை வெண்பா மானமோ கங்களின்றி மற்றுநசைக் குற்றமற் றானவுயிர்த் தன்மையமர்ந் தாசையது – தானகன்றே இன்பமிகு துன்ப விருமைளிட் டிங்குணர்வோர் மன்பதமே தாமடைவர் வாய்ந்து. 15.5 மானமோகங்களின்றி தேஹாத்மாபிமானமாகிற மயக்கம் நீங்கப்பெற்றவர்களாய் மற்று நசை குற்றமற்று குணமயப்பொருள்களில் பற்றாகிற தோஷம் நீங்கப்பெற்றவர்களாய் ஆன உயிர்தன்மை அமர்ந்து ஆத்ம ஜ்ஞானத்தில் எப்போதும் ஈடுபட்டவர்களாய் ஆசை அது தான் அகன்றே மற்ற விஷயங்களில் விருப்பம் அகலப்பெற்றவர்களாய் மிகு இன்பதுன்ப இருமை விட்டு மிகுந்த இன்ப துன்பங்களாகிற இரட்டைகளிலிருந்து விடுபட்டவர்களாய் இங்கு உணர்வோர் (தேஹாத்மாக்களைப்பற்றிய அனைத்து மயக்கங்களும் நீங்கப்பெற்று) தேஹாத்மாக்களின் தன்மைகளை அறிபவர்களாய் மன்பதமே ஜ்ஞானத்தில் ஏற்றத் தாழ்வற்ற முக்தி நிலையிலுள்ள தம் ஆத்மாவை வாய்ந்து தாம் அடைவர் பரிபூர்ணமாகத் தாம் பெறுவார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0