பகவத் கீதை வெண்பா பதினைந்தாம் அத்தியாயம் - புருஷோத்தமயோகம் அத்தியாயப்பொருளின் சுருக்கம் மன்னு மசித்தின் மருவியமர் சித்தினுமா றுன்னு முயிர்வகையி லுத்தமனா மன்னியவை மீதுள் பரந்து பரித்திறையாய் மேவினனை யோதும் பதினைந்தா மோத்து. 15.0 மன்னும் அசித்தின் மருவி அமர் சித்தினும் அனாதி காலமாகச் சேர்ந்திருக்கும் அசேதனமான ப்ராக்ருத ஸரீரத்தோடு கூடிய பத்த ஜீவனைக்காட்டிலும் மாறு உன்னும் உயிர் வகையில் அவ்வசித்தை விட்டு நீங்கியதாக அறியப்படும் முக்தாத்மாவைக்காட்டிலும் உத்தமனா மன்னி மேற்பட்டவனாக விளங்கி அவை மீது உள் பரந்து அவ்விரண்டையும் வியாபித்து பரித்து அவற்றைத்தாங்கி இறையாய் அவற்றை உடையவனாய் மேவினனை பொருந்தியிருக்கும் புருஷோத்மனான நாராயணனை பதினைந்தாம் ஓத்து (கீதையின்) பதினைந்தாம் அத்தியாயம் ஓதும் கூறும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0