பகவத் கீதை வெண்பா பதினாறாம் அத்யாயம் - தெய்வாசுரஸம்பத் விபாகயோகம் அத்தியாயப்பொருளின் சுருக்கம் தன்மையாற் றேவ ரசுரரெனச் சார்பிறவி நன்மைசேர் சாத்திரத்தினாடுதலும் – தொன்மை யுரைக்கங் கறிவுரைப்புக் காட்டுதற்குக் கீதை யுரைக்கும் பதினாறா மோத்து. 16.0 கீதை பதினாறாம் ஓத்து கீதையின் பதினாறாம் அத்தியாயம் அங்கு தொன்மை உரைக்கு அந்த கீதையில் இதுவரை (அடையத்தக்க) தத்துவத்தைப்பற்றியும் அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டானத்தைப் பற்றியும் சொல்லப்பட்ட விஷயங்களின் அறிவு உரைப்பு காட்டுதற்கு அறிவு உறுதிப்படுவதற்காக தன்மையால் தேவர் என சார்பிறவி (மனிதர்கள்) தம் இயல்வால் தேவர் அசுரர் என இருவகைப் பிறவிகளாகப் பிரிவுப்பட்டிருப்பதையும் நன்மைசேர் சாத்திரத்தின் நாடுதலும் நன்மையை அடைவிக்கும் சாஸ்திரததிற்கு வசப்பட்டிருக்கும் தன்மையையும் உரைக்கும் விளக்குகிறது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0