பகவத் கீதை வெண்பா இதுபெற்றே னிப்போ திதுயா னினைந்த திதுகிட்டு வன்மேலு மின்னே – யிதுவென்ன தாயேயுண் டாகின்ற தாங்கதற்பி னித்தனமு மேயேயுண் டாமெனக்கு மிக்கு. 16.13 இது இப்போது பெற்றேன் (வயல் பிள்ளை முதலிய) இவ்வனைத்தும் இப்போது (என் திறமையாலே) பெற்றிருக்கிறேன் இன்னே இதுபோலேவே மேலும் இனிவரும் காலத்திலும் யான் நினைந்தது இது இது நான் பெற விரும்பும் இந்த இந்தப்பொருளை கிட்டுவன் (என் திறமையாலேயே) அடைவேன் இது (தனம்) என்ன தாயே உண்டாகின்றது இந்தச் செல்வம் என் திறமையாலேயே (எனக்கு) உண்டாயிருக்கிறது ஆங்கு அதன்பின் இத்தனமும் வருங்காலத்தில் (நான் பெற நினைக்கும்) இந்தச் செல்வமும் எனக்கு மேயே மிக்கு உண்டாம் என் திறமையால் எனக்கு மிகவும் உண்டாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0