பகவத் கீதை வெண்பா பூத மிருவகையாய்ப் போருமே யிவ்வுலகி லாதமருந் தெய்வமாங் காசுரமா- மீததனிற் றெய்வம் விரித்துரைத்தேன் சேர்ந்துநீ யாசுரத்தை மெய்வகைகேள் பார்த்தா விரித்து. 16.6 பார்த்தா குந்தி பிள்ளையே! இவ்வுலகில் இந்தக் கர்மலோகத்தில் பூதம் ஜீவராசிகளின் படைப்பு இரு வகையாய்ப் போருமே இரண்டுவிதமாக இருக்கும் ஆங்கு ஆது அத்தகைய அது தெய்வம் ஆசுரமா அமரும் தெய்வப்பிறவி என்றும் அஸுரப்பிறவி என்றும் (இருவகையாக) அமையும் மீது அதனில் உலகெங்கும் பரந்த அவ்விருவகைப் படைப்புகளில் தெய்வம் தெய்வப்பிறவியின் ஒழுக்கத்தை விரித்துரைத்தேன் விரிவாகச் சொன்னேன் சேர்ந்து கவனமாக ஆசுரத்தை அசுரப்பிறவியின் ஒழுக்கத்தைப் பற்றி விரித்து விரிவாக மெய்வகை உள்ளபடி (நான் சொல்வதை) கேள் கேட்பாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0