பகவத் கீதை வெண்பா இங்கறிவுகேட்டுக் கிம்மூன்றும வாசலென வங்கறிந்து விட்டோ னரசனே – சங்கையறத்தன்னன்மை யாசரிக்கத் தன்மைப் பரகதியா மிந்நன்மை சேரு மெழுந்து. 16.21 அரசனே அரசனே! இம்மூன்றும் காமக்ரோதலோபங்களாகிற இம்மூன்றும் இங்கு இவ்வுலகில் அறிவு கேட்டுக்கு என்னைப் பற்றிய விபரீதஜ்ஞானத்திற்கு வாசல் என நுழைவாயிலாயிருப்பவை என்று அங்கு அறிந்து விட்டோன் நன்றாக அறிந்து இம்மூன்றையும் கைவிட்டவன் சங்கை அற சந்தேஹமில்லாமல் தன் நன்மை ஆசரிக்க தனது நன்மையில் முயற்சி கொள்வதன் மூலம் தன்மைப் பரகதியாம் இந்நன்மை கதியாகவும் நன்மையாகவும் இருக்கும் என்னை எழுந்து சேரும் (வானுலகிற்கு) உயரச்சென்று அடைவான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0