பகவத் கீதை வெண்பா பகவத்கீதை வெண்பா (பதினாறாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்) இப்படியே தேவா சுரமா மியல்வதனைத்தப்பறுசீர் ஞானத் தகுநிலைமைக் – கொப்பாப்பகர்ந்தசீர்க் கீதைப் பதினாறா மோத்தில் நிகழ்ந்தபொருண் முற்றியது நேர்ந்து. 16.23A இப்படியே இவ்வண்ணமாக தேவாசுரமாம் இயல்வதனை தெய்வப்பிறவியினுடையவும் அசுரப்பிறவியினுடையவும் தன்மைகளை தப்பு அறு சீர் ஞானத்தகுநிலைமைக்கு ஒப்பா விட்டுப்பிரியாத சிறப்பையுடைய (அவரவர்) அறிவின் தன்மைக்கு அனுகுணமாக பகர்ந்த கூறிய சீர் சிறப்பையுடைய கீதை பதினாறாம் ஓத்தில் நிகழ்ந்த பொருள் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தில் சொல்லிய அர்த்தம் நேர்ந்து முற்றியது பொருத்தமாக நிறைவுற்றது. வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினாறாம் அத்தியாயம் முற்றிற்று. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0