பகவத் கீதை வெண்பா

தன்ம மிலாடம்பந் தன்செருக்குத் துன்மானம்
வன்மையுறு சீற்றம் வளர்கொடுமை – நன்மை
யறியாமை பார்த்தனே யாசுரமாஞ் செல்வஞ்
செறிவாருக் குண்டாந் திறம்.          16.4

பார்த்தனே!

குந்தீபுத்திரனே!

தன்மமிலா டம்பம்

தர்மத்தை தர்மத்திற்காகச் செய்யாமல் புகழுக்காகச் செய்வது

தன்செருக்கு

ஸப்தாதிவிஷயங்களை அநுபவிப்பதினால் உண்டாகும்) களிப்பு

துன்மானம்

அதிகமான கர்வம்

வன்மை உறு சீற்றம்

பிறரைத் துன்புறுத்தும் கோபம்

வளர் கொடுமை

(நல்லோர்களை வெறுப்படையச்செய்யும்) மிக்க கடுமை

நன்மை அறியாமை

தத்வ விஷயத்திலும், செய்யத்தக்கது தகாதது விஷயத்திலும் அறிவின்மை (ஆகியவை)

ஆசுரமாம் செல்வம் செறிவாருக்கு

(பகவதாஜ்ஞையை மீறி நடக்கையாகிற) அஸுரர்க்குரிய செல்வத்தை உடையவனுக்கு

உண்டாம் திறம்

அமையும் குணங்களாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top