பகவத் கீதை வெண்பா

இச்சகத்து மெய்யன் றிதற்கோர் நிலையில்லை
மிச்சவிறை யில்லென்று மேல்விழுந்து – பிச்சுரைப்பார்
தன்னிற்றான் காமத்தாற் சார்ந்தே பிறக்குமதென்
றென்னிற்றான் மற்றே தெனல்.         16.8

இச்சகத்து மெய் அன்று

இவ்வுலகம் மெய்யான பரம்பொருளிலிருந்து உண்டானதன்று

இதற்கு ஓர் நிலை யில்லை

இவ்வுலகிற்குப் பரம்பொருளாகிய ஓர் நிலைநிற்குமிடம் இல்லை

மிச்ச இறை இல்

இவ்வுலகனைத்தையும் நியமிக்கும் ஈஸ்வரன் இல்லை

என்று மேல் விழுந்து பிச்சு உரைப்பார்

என்று (ஆஸுரர்கள்) விடாப்பிடியாகப் பிதற்றுவார்கள்

தன்னில்தான் காமத்தால் சார்ந்தே பிறக்குமது

ஆண் பெண் காமத்தால் புணர்வதால் பிறப்பதே உலகம்

என்று

என்று கூறி

என்னில் தான் மற்று ஏது எனல்

(ஸர்வேஸ்வரனான) என்னிடமிருந்து உண்டாகும் வேறு பொருள் ஏது என்று கூறுவார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top