பகவத் கீதை வெண்பா

பதினேழாம் அத்யாயம் - சிரத்தாத்ரய விபாகயோகம்

அத்தியாயப்பொருளின் சுருக்கம்

ஆசுரமா மின்மை சாத்திரந்தான் சாத்திரத்திற்
றேசுடைய கன்மஞ் செறிகுணத்தாற் – பேசுநெறி
சேர்ந்தேயிம் முக்குணங்கள் செப்புமே மூவகையா
வோர்ந்தே பதினேழா மோத்து.          17.0

சாத்திரம்தான் இன்மை

சாத்திரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்

ஆசுரம் ஆம்

அசுரர்க்குரிய தாகும்

சாத்திரத்தில் தேசுடைய கன்மம்

சாத்திரத்தில் விதிக்கப்பட்டிருக்கையாகிற சிறப்புடைய கர்மங்கள்

செறி குணத்தால் மூவகையா

(தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களையிட்டு மூவகையாகவும்

பேசு நெறி இம் முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா

(சாஸ்திரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்) இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்

பதினேழாம் ஓத்து

பதினேழாம் அத்தியாயம்

ஓர்ந்தே செப்புமே

ஆராய்ந்து கூறும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top