பகவத் கீதை வெண்பா

அஞ்சா வகைசொல் லதின்மெய் யுகப்பிதமாத்
துஞ்சா மறையின் சொலின்வலியா- லெஞ்சாத
வாக்கதனி னின்றும் மருவுதவ மென்பரே
யூக்க மனமுடையோ ருற்று.        17.16

அஞ்சாவகை

பிறர் அருவருக்காத வகையில்

அதில் மெய் உகப்பு இதமாச்சொல்

அதிலும் உண்மையானதாய் இனிமையானதாய் நன்மை பயப்பதாய் உள்ள சொல்

துஞ்சா மறையின் சொலின் வலியால் எஞ்சாத (சொல்)

அழியாத வேதத்தின் ஓதுதலால் பலம் குறையாத சொல் (ஆகியவை)

வாக்கதனில் நின்றும்

வாக்கிலிருந்து

மருவு

வெளிப்படும்

தவம்

தவமாகும்

என்று ஊக்க மனமுடையோர்

உறுதியான நெஞ்சுடையோர்

உற்று

ஆராய்ந்து

என்பரே

கூறுவர்கள்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top