பகவத் கீதை வெண்பா

மனந்தெளித னன்கறிதல் வாயுரையை மீட்ட
னினையுமனஞ் சேர நிறுத்த – லினமியல்வு
சேராத தூய்மையிவை சித்தத்துச் சேர்தவமென்
றாராய்வர் ஞானத் தவர்.         17.17

மனம்தெளிதல்

மனத்தில் கோபம் முதலான குணங்கள் அற்றுத் தெளிவாயிருக்கை

நன்கு அறிதல்

(மனத்தில்) பிறர்க்கு நன்மையே எண்ணுதல்

வாய் உரையை மீட்டல்

மனத்தாலே வாக்கின் செயலை அடக்குவது

நினைவு மனம் சேர நிறுத்தல்

மனத்தை (ப்ராக்ருத விஷயங்களிலிருந்து) அடக்கி தியானிக்கத்தக்க விஷயங்களில் நிலைநிறுத்தல்

இனம் இயல்வு சேராத தூய்மை

ஆத்மாவைத் தவிர்ந்த விஷயங்களைப் பற்றிய நினைவு இல்லாமலிருத்தல்

இவை

ஆகிய இவை

சித்தத்து சேர்தவம் என்று

மனத்தால் செய்யப்படும் தவம் என்று

ஞானத்தவர்

அறிவாளிகள்

ஆராய்வர்

ஆராய்ந்து உரைப்பர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top