பகவத் கீதை வெண்பா முக்கரணஞ் செய்தவங்கண் மூன்றுவித மார்வமுயர்ந் தொக்க வருபயனை யுள்ளொழித்துத் – தக்கவர்கள் செய்யுந் தவத்தைச் சிறக்கின்ற முற்குணத்தென் றுய்யு மவருரைப்ப ருற்று. 17.18 முக்கரணம் செய்தவங்கள் மூன்று விதம் மனம் மொழி மெய் என்னும் மூன்று கரணங்களாலும் செய்யப்படும் மூன்றுவகைப்பட்ட தவங்களையும் ஆர்வம் உயர்ந்து மேலான ஸ்ரத்தையோடு ஒக்க வருபயனை உள்ளொழித்து (அத்தவத்திற்குத்) தன்னடையே வரும் பயனில் நெஞ்சு செலுத்தாமல் தக்கவர்கள் (இத்தவம் எம்பெருமானுக்கு ஆராதனம் என்னும்) நினைவுடையவர்கள் செய்யும் தவத்தை செய்கின்ற தவத்தை சிறக்கின்ற முன் குணத்(த)து என்று சிறந்ததான ஸத்வகுணத்தால் விளைகின்றது என்று உய்யும் அவர் உஜ்ஜீவனத்தைத் தேடுகின்றவர்கள் உற்று உரைப்பர் ஆராய்ந்து கூறுவர். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0