பகவத் கீதை வெண்பா காலம் கழிந்து கழிந்திரதந் துற்கெந்தித் தேல மிகப்பழகி யெச்சிலாய்ச் – சாலப்படைத்தமுதுக் காகாத பாவச்சோ றாகுங் கடைக்குணத்தா னுண்ணுங் கணக்கு. 17.10 காலம் கழிந்து நீண்டநேரமானதாய் இரதம்கழிந்து இயற்கைச் சுவை இழந்ததாய் துற்கெந்தித்து கெட்ட நாற்றமுடையதாய் ஏலமிகப்பழகி நெடுங்காலமானதால் சுவை வேறுபட்டதாய் எச்சிலாய் (ஆசார்யர் முதலான பெரியவர்கள் தவிர மற்றவர்கள்) உண்டு மிகுந்த கலத்தில் உள்ள எச்சிலாய் சாலப்படைத்து அமுதுக்கு ஆகாத பாவச் சோறு ஆகும் யாகத்தில் நன்றாகப் படைக்கப்பட்டு உண்பதற்குத் தகுதி பெருத பாவச்சோறாயிருப்பது கடைக்குணத்தான் உண்ணும் கணக்கு கடைசி குணமான தமோகுணம் மிகுந்தவன் கணக்கிட்டு உண்ணும் சோறு Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0