பகவத் கீதை வெண்பா

விதியற் றவியற்று மந்திரமும் விட்டே
யதின்மேவு தக்கணையு மற்றுக் – கதிசேர்ந்த
வேலுஞ் சிரத்தையிலா வெச்சங் கடைக்குணத்தாற்
கோலு மெனவுரைப்பர் கூர்ந்து.      17.13

விதியற்று

(அந்தணர்களின்) அநுஜ்ஞா வாக்யத்தைப் பெறாததும்

அவியற்று

நியாயமான வழியில் ஸம்பாதிக்கப்படாத த்ரவ்யங்களை உடையதும்

மந்திரமும் விட்டே

உரிய மந்திரங்கள் இல்லாததும்

அதில் மேவு தக்கணையும் அற்று

யாகத்தில் கொடுக்க வேண்டிய தக்ஷிணை இல்லாததும்

கதிசேர்ந்த ஏலும் சிரத்தையிலா

பாலனை விளைக்கக்கூடிய பொருத்தமான சிரத்தையில்லாததுமான

எச்சம்

யாகமானது

கடைக்குணத்தால் கோலும் என

கடைசியான தமோ குணத்தால் செய்யப் படுவது என்று

கூர்ந்து உரைப்பர்

(ஸாஸ்தரமறிந்தவர்கள்) ஆராய்ந்து கூறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top